ETV Bharat / bharat

மீனவர்களுக்கு மானியத்தில் கட்டுமரம்: நிதி வழங்கிய முதலமைச்சர் - cm rangasamy

புதுச்சேரி: மீனவர்கள் மானியத்தில் கட்டுமரம் வாங்கும் வகையில் முதலமைச்சர் ரங்கசாமி நிதி வழங்கினார்.

cm distribute fund to fishermen
முதலமைச்சர் ரங்கசாமி
author img

By

Published : Jul 19, 2021, 8:08 PM IST

புதுச்சேரி மீன்வளம், மீனவர் நலத் துறையில் சிறு தொழில் மீனவர்களுக்கான மானிய உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதன் கீழ் 2020-21ஆம் ஆண்டிற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (ஜூலை19) நடைபெற்றது.

புதுச்சேரி மாநில மீனவர் கூட்டுறவு சம்மேளனத்தின் மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில், 15 பயனாளிகளுக்கு 50 விழுக்காடு மானியத்தில் கண்ணாடி நுண்ணிழை இயந்திரம் இல்லா கட்டுமரம் வாங்குவதற்கான நிதி வழங்கப்பட்டது. முதலமைச்சர் ரங்கசாமி மீனவர்களிடம் நிதியை வழங்கினார்.

மொத்தம் இரண்டு லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடலோர கிராம சட்டப்பேரவை உறுப்பினர்கள், மீனவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தேசிய கடல் மீன்வள மசோதா: அமைச்சர் எல். முருகன் மீனவர்களை அழைத்துப் பேச வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.