பசவண்ணாவின் அனுபவா மண்டபத்தை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று நிறைவேறி உள்ளது.
கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியுரப்பா பீதர் மாவட்டம் பசவகல்யனத்தில், அனுபவா மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்தார்.
லிங்காயத் துறவிகளின் புனித மண்டபமான இது, ரூ.500 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இது 72 ஏக்கரில் கட்டப்படும், அனுபவ மண்டப 182 அடி உயரத்தில் இருக்கும். ஏற்கனவே 108 அடி உயரத்தில் பசவண்ணா சிலை கட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நகரில் அபிவிருத்தி பணிகள் மற்றும் பொது விழாக்களின் தொடக்க நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் கலந்துகொள்கிறார்.
இதையும் படிங்க: விவேகானந்தர் மண்டப பொன்விழா: குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்