ETV Bharat / bharat

காந்தி பிறந்த நாட்டில் இருப்பதால் பிரதமருக்கு உலகளவில் மரியாதை - ராஜஸ்தான் முதலமைச்சர் - மோடிக்கு உலகளவில் மரியாதை

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகியும், ஜனநாயகத்தின் வேர்கள் ஆழமாக ஓடும் மகாத்மா காந்தி பிறந்த நாட்டின் பிரதமராக இருப்பதால் மோடிக்கு மரியாதை கிடைக்கிறது என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர்
ராஜஸ்தான் முதலமைச்சர்
author img

By

Published : Nov 1, 2022, 10:00 PM IST

ராஜஸ்தான் (பன்ஸ்வாரா): 1913 ஆம் ஆண்டு நடந்த மங்கார் படுகொலையை நினைவுகூரும் வகையில் 'மங்கார் தம் கி கவுரவ் கதா' என்ற பெயரில் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு செல்லும் போது, அவருக்கு அதிகளவு மரியாதை கிடைக்கிறது. காரணம், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகியும் ஜனநாயகத்தின் வேர்கள் ஆழமாக ஓடும் மகாத்மா காந்தி பிறந்த நாட்டின் பிரதமராக இருப்பதால் அவருக்கு மரியாதை கிடைக்கிறது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறப்பது முதல் சுகாதார வசதிகளை வழங்குவது வரை பழங்குடியினருக்காக எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு நிறைய செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தொடங்கப்பட்ட ரத்லாம் - துங்கர்பூர் - பன்ஸ்வாரா இடையேயான ரயில்வே திட்டத்தை பிரதமர் மோடி மறு ஆய்வு செய்ய வேண்டும். இதை பிரதமர் நரேந்திர மோடி செய்வார் என்று நம்புகிறேன்" என கூறினார்.

இதையும் படிங்க: வனத்துறையுடன் மல்லுகட்டிய காட்டு யானை… வைரலாகும் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.