ETV Bharat / bharat

"ஹோலி கொண்டாட்டம் இல்லை; நாள் முழுவதும் பூஜை மட்டுமே" கெஜ்ரிவால் முடிவின் காரணம் என்ன?

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில், நாட்டின் நிலை மோசமாக உள்ளதாகவும் அதற்காக இன்று ஹோலி கொண்டாடாமல் வீட்டில் முழு நேரமும் பூஜை செய்யப்போவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்
author img

By

Published : Mar 8, 2023, 11:34 AM IST

Updated : Mar 8, 2023, 11:49 AM IST

டெல்லி: வண்ணங்கள் ஜொலிக்க இன்று நாடு முழுவதும் ஹோலி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் நேற்று (மார்ச் 7) முதலேயே ஹோலி கொண்டாட்டத்தை தொடங்கினர். மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு, மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஹோலி கொண்டாடிய BSF வீரர்கள்!

இந்நிலையில் நேற்று (மார்ச் 7) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தான் ஹோலி கொண்டாடப் போவது இல்லை என கூறி காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நாட்டின் நிலைமையை நினைத்து தான் மிகவும் வருந்துவதாகவும், அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

பின்னர், டெல்லியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி வந்த சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா இருவரும் பிரதமரின் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தான் தற்போது நாட்டின் நிலைமை மோசமானதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நல்ல முறையில் கல்வி, சுகாதாரம் போன்றவற்றை வழங்கியவர்களை கைது செய்த மோடி அரசு, அராஜகத்தில் ஈடுபட்டு கொள்ளையடிக்கும் நபர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது கவலையாக உள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் வேதனை தெரிவித்தார். இதனால் இன்று கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையை தான் கொண்டாடப் போவது இல்லை எனவும், இன்று முழுவதும் நாட்டுக்காக தனது வீட்டில் பூஜை செய்யப்போவதாகவும் தெரிவித்த அவர், நாட்டு மக்களையும் பூஜை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

  • मैं इस बार होली वाले दिन देश के लिए पूजा-प्रार्थना करूंगा।

    अगर आप भी देश की स्थिति को लेकर चिंतित है और आपको लगता है प्रधानमंत्री ठीक नहीं कर रहे तो आपसे Appeal:#Holi मनाने के बाद, थोड़ा समय निकालकर देश की ख़ातिर मेरे साथ भगवान की पूजा और ध्यान करना।

    -CM @ArvindKejriwal pic.twitter.com/XysnSpuYq0

    — AAP (@AamAadmiParty) March 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: மும்பையில் மன அழுத்தத்தால் திருநங்கை தற்கொலை

இதனைத் தொடர்ந்து நாட்டில் சாமானியர்கள் பேச்சைக் கேட்க யாரும் இல்லை என கூறிய அவர், ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கிய மணீஷ் சிசோடியா மற்றும் ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்த சத்யேந்தர ஜெயின் இருவரையும் பொய் வழக்கு போட்டு பாஜக அரசு சிறைக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டினார்.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்ததுள்ளதும், டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆம்ஆத்மி கட்சியை பார்த்து பாஜக பயப்படுவதாகவும், இதனால் தான் பொய் குற்றச்சாட்டுகள் மூலம் கட்சி தலைவர்களை கைது வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த கைது நடவடிக்கையை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாடகர் பவன் சிங் மீது கல்வீச்சு.!

Last Updated : Mar 8, 2023, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.