திருவனந்தபுரம்: கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைபெற்று வரும் மருத்துவ பரிசோதனைகளின் இடைக்கால முடிவுகள், ஐரோப்பிய நாடுகளிலிருந்து பரவிய உருமாறிய கரோனா வைரஸிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து, கேரள அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் ஒரு இணைய வழி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பால்ராம் பார்கவா, "ஐரோப்பிய நாடுகளிலிருந்து பரவிய உருமாறிய கரோனா வைரஸிற்கு எதிரான கோவாக்சின் தடுப்பு மருந்தின் நிலைபாடு என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. இவை ஆராய்ச்சிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிய பயணிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றது.
கோவாக்சின் பிபி 152- இன் மூன்றாவது மருத்துவ சோதனை முடிந்தது. இந்த ஆய்வில் ஈடுபட்ட 25,800 தன்னார்வலர்களும் இரண்டு டோஸ்கள் அளிக்கப்பட்டதுய இதன் ஆய்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளிவரும். தொற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகளில் இந்தியா உலகின் ஐந்தாவது நாடாக உள்ளது" என்றார்.