லூதியானா: முள்ளன்பூர் சாலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கமெண்ட்டால், பட்டம் பெற வந்த மாணவர்களை ஜூனியர்கள் ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
இந்த மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் லூதியானாவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
பட்டமளிப்பு விழாவை சமூக வலைதளங்களில் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப்பதிவு சரியாக காணப்படவில்லை என பல்கலைக்கழக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு தற்போது பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்க வந்த மாணவர்களுக்கும் படிக்கும் மாணவர்களுக்கும் மோதல் நடந்துள்ளது.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்..