ETV Bharat / bharat

ஒடிசாவில் காலரா பரவல்... ஒரே மாவட்டத்தில் 12 பேர் உயிரிழப்பு - காலரா பரவல்

ஒடிசாவின் , ராயகடா மாவட்டத்தில் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 12 பேர் உயிரிழந்தனர்.

ஒடிசாவில் காலரா பரவல்
ஒடிசாவில் காலரா பரவல்
author img

By

Published : Jul 28, 2022, 6:19 AM IST

ஒடிசா: ராயகடா மாவட்டத்தில் காசிபூர் பகதியில் கடந்த சில வாரங்களாக காலரா நோய் பரவல் தீவரமாக உள்ளது. இதுவரையில் காலராவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 313ஐ எட்டியுள்ளது.

சுமார் 20 கிராமங்கள் தண்ணீரால் பரவும் காலார நோயின் பிடியில் உள்ளன. 297 கிராமங்கள் கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டும், நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இந்த தொகுதியில் உள்ள திகிரி, சங்கரடா, துடுகாபஹால் ஆகிய பஞ்சாயத்துகளின் பல கிராமங்களில் நிலைமை மோசமாக உள்ளது.

இங்கு சுகாதார துறையும் ஏழு இடங்களில் முகாம்களை அமைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையைக் கண்காணித்து வருகிறது. இதேபோல், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் துணை மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதே காசிபூரில் காலராவால் 2010 ல் சுமார் 100 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடிப்படை வசதிகள் இல்லாததால் இளைஞர்களுக்கு திருமணம் ஆவதில் சிக்கல் - நட்சத்திர சட்டப்பேரவை தொகுதியில் உள்ள கிராமத்தில் அவல நிலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.