இந்தியா-வங்கதேச எல்லைப்பகுதியான மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்குரிய நபர் பிடிபட்டார். அவரை சோதனை செய்து விசாரித்தபோது அவர் சீனாவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து லேப்டாப், சீனா பாஸ்போர்ட் உள்ளிட்ட உபகரணங்கள் பிடிபட்டன. அவரிடம் எல்லைக் காவல்படையினர், உள்ளூர் காவல்துறையினர், உளவுத்துறையினர் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர். உரிய விசாரணைக்குப் பின்னர் இவரை கைது செய்வதா அல்லது சீனாவிடம் ஒப்படைப்பதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
முன்னதாக இன்று(ஜூன் 10) காலை சுமார் 20 ஆண்டுகளாக மால்டாவில் தங்கி ஆள்கடத்தலில் ஈடுபட்டு வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து இரண்டு செல்போன்கள், போலி சிம் கார்டுகள், போலி ஆதார் கார்டுகள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: ’பிரதமர் மோடிதான் டாப் தலைவர்’ - சிவசேனா சஞ்சய் ராவத்