ETV Bharat / bharat

அருணாச்சலப் பிரதேசத்தை இணைத்து புதிய மேப் வெளியிட்ட சீனா.. தைவானுக்கும் உரிமை கோரியதால் சர்ச்சை!

சீன அரசு எல்லையில் உள்ள இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை இணைத்து புதிய வரைபடம் வெளியிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், அருணாச்சலப் பிரதேசம், தைவான் உள்ளிட்டவற்றிற்கு சீனா உரிமை கோரியுள்ளது.

China
China
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 2:13 PM IST

பெய்ஜிங்: இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் எல்லைப் பகுதியில் உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையை ஒட்டியுள்ளது. இதனால், அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அப்பகுதிகளை "தெற்கு திபெத்" என்று சீனா கூறி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதனை சுமூகமாக தீர்ப்பதற்காக இருநாடுகளும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், அவ்வப்போது எல்லைப் பகுதிகளில் சீனாவின் அத்துமீறலால் பதற்றங்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்த எல்லைப் பதற்றங்கள் அதிகரித்துவிட்டன.

அருணாச்சலப் பிரதேசத்தை தங்களுடையது என அறிவுறுத்தும் வகையில் எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானங்களைக் கட்டி வருகிறது. எல்லைப் பகுதியில் சாலை, வீடுகள் போன்றவற்றை கட்டுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு இந்த கட்டுமானங்கள் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், சர்ச்சைக்குரிய பகுதியில் ஒரு சிறிய கிராமத்தையே சீனா கட்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் மெய்யான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC)-க்கும் சர்வதேச எல்லைக்கும் இடையே உள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இந்த கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்தது. எல்லைப் பகுதிகளில் சீனாவின் செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக இந்திய எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் அருணாச்சலப் பிரதேசம் முழுமையாக இந்தியாவுக்கே சொந்தம் என்றும் இந்தியா கூறி வருகிறது.

இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய அதிகாரப்பூர்வ வரைபடத்தை சீன அரசு நேற்று(ஆகஸ்ட் 28) வெளியிட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம், சீனா ஆக்கிரமித்துள்ள அக்சாய் சின் பகுதி, தைவான், சர்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதிகளை சீனா உரிமை கோரியுள்ளது. அதில், அருணாச்சலப் பிரதேச பகுதிகளை தெற்கு திபெத் என்றும் குறிப்பிட்டுள்ளது. சீனா உரிமை கோரியுள்ள சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதிகளை வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் உரிமை கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மணிப்பூரில் சட்ட ஒழுங்கு பிரச்னை; 3662 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.