புதுச்சேரி: ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக்கொள்ளை விழா கடந்த 15ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 50 கிலோ மிளகாய் பொடி அபிஷேகம் மற்றும் தயிர், எலுமிச்சை, மஞ்சள், பால், இளநீர், உள்ளிட்ட ஆறு வகையான சிறப்பு அபிஷேகம் இன்று (பிப்.25) வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். மேலும், விழா முடிவில் பக்தர்களுக்கு தொழிலதிபர் செந்தில் மற்றும் அய்யனார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். இந்த அபிஷோகத்தை கண்டவர்கள் வியப்புடன் அங்கிருந்து சென்றனர்.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் 6 சைவத் திருத்தலங்களில் மாசிமகப் பெருவிழா தொடக்கம்