திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பிறப்பு சான்றிதழிலிருந்து தந்தையின் பெயரை நீக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதோடு, திருமணமாகாத தனது தாயின் பெயரை மட்டுமே அனைத்து சான்றிதழ்களிலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் அமர்வில் இன்று (ஜூலை 25) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இளைஞர்களின் சுதந்திரம், தனியுரிமை, கண்ணியம் ஆகியவற்றை யாராலும் மறுக்க முடியாது. திருமணமாகாத தாய்மார்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டவர்களின் குழந்தைகளும் இந்த நாட்டின் குடிமக்களே. அரசியலமைப்புச் சட்டம் இவர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை யாராலும் மறுக்க முடியாது.
அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. அவ்வாறு செய்ய முயன்றால், நீதிமன்றங்கள் வேடிக்கை பார்க்காது. இந்த மனுதாரரின் பிறப்பு சான்றிதழில் தாயின் பெயரை மட்டுமே குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட பதிவாளர் புதிதாக வழங்க வேண்டும். அதோடு, கல்வி, தேர்வு, ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட மனுதாரர் தொடர்பான அனைத்து ஆவணங்களிலிருந்தும் விண்ணப்பதாரரின் தந்தையின் பெயரை நீக்கி தாயார் பெயரை சேர்க்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டக்கூடாது" என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இந்தியாவில் யாரும் பசியால் சாகக்கூடாது - உச்ச நீதிமன்றம்