ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் குண்டுவெடிப்பு

author img

By

Published : Jan 2, 2023, 11:26 AM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியிருப்பில் குண்டுவெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் குண்டுவெடிப்பு
ஜம்மு காஷ்மீரில் குண்டுவெடிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள டாங்ரி கிராமத்தில் குடியிருப்பு வாசியின் வீட்டில் இன்று (ஜனவரி 2) குண்டுவெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு குழந்தை பலியாகியுள்ளது. 5 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினரும், போலீசாரும் சம்பவயிடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

டாங்ரி கிராமம் பாதுகாப்பு படையினருடைய கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த குண்டி வெடிப்பு பயங்கரவாதிகளின் தாக்குதலாகும். முதல்கட்ட தகவலில், IED(improvised explosive device) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு மேலும் ஒரு IED வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் நேற்றிரவு (ஜனவரி 1) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் முறையான பாதுகாப்பு வழங்காமல் இருந்ததாலே இந்த தாக்குதல் நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்திவரும் நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் - பொதுமக்களில் 4 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.