ETV Bharat / bharat

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு! - டெல்லி விமான நிலையம்

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

Stalin Nirmala meet
ஸ்டாலின் நிர்மலா சந்திப்பு
author img

By

Published : Apr 28, 2023, 3:48 PM IST

டெல்லி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 28) காலை, சென்னையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்த அவர், கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.

கிண்டியில் பன்னோக்கு அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை என அதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் அழைப்பை ஏற்று ஜூன் 5ம் தேதி சென்னை வர குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சம்மதம் தெரிவித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் சென்னை திரும்புவதற்காக பிற்பகல் 1.30 மணிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்குத் திரும்பினார்.

அப்போது மும்பை செல்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். விஐபி அறையில் காத்திருந்த முதலமைச்சர் ஸ்டாலினுடன், நிர்மலா சீதாராமன் சிறிதுநேரம் உரையாடினார். இந்தச் சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இருவரும் பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் - நிர்மலா சீதாராமன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதிகாரப்பூர்வ அலுவலக டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜூன் 5ல் கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.