மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திகார் சிறையில் உள்ள அவருக்கு கோவிட்-19 உறுதியான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
61 வயதான சோட்டா ராஜன் மீது 70க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. 2015ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் பதுங்கியிருந்த சோட்டா ராஜனை கைதுசெய்த இந்திய காவல்துறை, தாயகம் கொண்டுவந்தது.
கொலை வழக்கில் குற்றம் உறுதியான நிலையில் திகார் சிறையில் சோட்டா ராஜன் ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார்.
இதையும் படிங்க: 'வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் அணியுங்கள்'