சத்தீஸ்கர்: மாநிலத்தில் கான்கெர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகக் கருதப்படும் ஆல்டண்ட் பகுதியில் மகாதேவ் என்று அழைக்கப்பட்ட நக்சலைட் சோம்ஜிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் நாள் , சோம்ஜி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் வெடிகுண்டுகளைப் பொருத்திக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்நிலையில் தற்போது சோம்ஜி சிலை திறக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களில் பாதி பேர் நக்கசலைட்டுகளை ஆதரிக்கின்றனர். பாதி மக்கள் நக்சலைட்டுகள் மீதான அச்சத்தில் உள்ளனர். .
இதுகுறித்து கான்கெர் காவல் கண்கணிப்பாளர் எஸ்பி ஷலப் சின்ஹாவிடம் கேட்டபோது, “நக்சலைட்டுகள் பொதுமக்களை எப்படி தவறாக வழிநடத்துகிறார்கள், அவர்களின் வள்ர்சிக்கு எவ்வாறு தடையாக உள்ளனர் என்பது கிராம மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆல்டண்ட் பகுதி இன்னும் முழுமையாக எங்களின் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை, இருப்பினும் அப்பகுதியில் நாங்கள் குடிமராமத்து செயல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். ஆனால் முன்பு போல் தற்போது சூழல் இல்லை. மக்கள் மாறி உள்ளனர். "அங்கு பாலம் அமைப்பதாக அறிவிக்கப்பட்டபோது முதலில் கிராமவாசிகள் அதை எதிர்த்தனர், ஆனால் தற்போது கிராமவாசிகள் புரிந்துகொண்டு கிராம நிர்வாகத்தின் பணிகளைக் கவனிக்கின்றனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதய்பூர் கொலை வழக்கில் பயங்கரவாதிகளுக்கும் தொடர்புள்ளது - ராஜஸ்தான் உள்துறை அமைச்சர்