ராஜ்நந்தகவுன்(சத்தீஸ்கர்): சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜ்நந்தகவுனில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு தாபாவில் உள்ள தேநீர் கடையில் இளைஞர்கள் சிலர் தேநீரின் விலையைக் குறைக்கக்கோரி, தாபா உரிமையாளரைத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் தேநீர் கடை உரிமையாளர் பலத்த காயமடைந்தார்.
சில தினங்களுக்குமுன், இளைஞர்கள் சிலர் அதிகாலையில் தேநீர் அருந்துவதற்காக தாபாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்து. மேலும் இந்த இளைஞர்கள் தேநீர் குடித்துவிட்டு தாபா ஊழியரிடம், தேநீர் விலையை குறைக்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது.
தாபா உரிமையாளர் உள்ளிட்ட அங்கிருந்த ஊழியர்களை அந்த இளைஞர்கள் கும்பல் தாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த கும்பல் தாபாவை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. இதனால் தாபா முழுவதும் சேதமடைந்தது. தகவல் அறிந்து காவல் துறையினர் வருவதற்குள், அந்தக் கும்பல் தாபாவை முழுவதுமாக அழித்துவிட்டனர்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தாபா உரிமையாளர் தீபக் பிஹாரி மற்றும் அவரது சகோதரரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலின் போது ஊழியர்கள் ஓடிச்சென்று, எப்படியோ உயிர் தப்பினர். இதற்கிடையில், கூட்டத்தில் இருந்து ஒரு இளைஞன் தாபா உரிமையாளரை கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கினான். இதனால் தாபா உரிமையாளர் தீபக் பிஹாரி பலத்த காயம் அடைந்தார்.
தாபாவில் குவிக்கப்பட்ட படை: அப்பகுதிக்கு அருகில் உள்ள ஒரு மத வழிபாட்டுத்தலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சில இளைஞர்கள் வந்ததாக கூறப்படுகிறது. காலையில் திரும்பி வரும்போது, தாபாவில் இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர். இதுவரை போலீசார் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால், போலீஸ் குழு ஒன்று தாபாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், ராஜ்நந்தகவுன் எம்.பி., சந்தோஷ் பாண்டே, காயமடைந்தவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்று, சம்பவம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். எஸ்.பி.யுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சர்வதேச தேயிலை தினம்: சூரத்தில் சூடான டீ எவ்வளவு தெரியுமா?