ETV Bharat / bharat

காவல் நிலையத்தில் வைத்து மதபோதகரை தாக்கிய வலதுசாரி கும்பல் - Purani Basti police station

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள புரானி பாஸ்தி காவல் நிலையத்தல் வைத்து, மத போதகர் உள்ளிட்ட மூவர் மீது வலதுசாரி செயற்பட்டாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chhattisgarh: Right-wing activists manhandle pastor, 2 others at police station
காவல்நிலையத்தில் வைத்து மதபோதகரை தாக்கிய வலதுசாரி கும்பல்
author img

By

Published : Sep 6, 2021, 10:31 AM IST

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மதபோதகர் ஹரிஸ் சாகு, மதமாற்றத்தில் ஈடுபடுவதாக வலதுசாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகாரின்பேரில், புரானி பாஸ்தி காவல் நிலைய காவலர்கள் போதகர் சாகுவை காவல் நிலையம் அழைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மதபோதகர் ஹரிஸ் சாகு, சத்தீஸ்கர் கிறிஸ்தவ மன்றத்தின் செயலாளர் அங்குஷ் பரியேகர் உள்ளிட்ட இரண்டு பேருடன் காவல் நிலையம் வந்துள்ளார்.

அங்கு ஏற்கனவே இருந்த வலதுசாரிகள், சாகு உள்ளிட்ட மூவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான போதகர் சாகு கொடுத்த புகாரின்பேரில், பலர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், கபீர்தாம் மாவட்டத்திலும் மதபோதகர் ஒருவரை, வலதுசாரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பெண்ணை சீண்டிய மதபோதகர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.