ETV Bharat / bharat

பிறந்து 45 நாள்களே ஆன குழந்தையை கொன்ற கொடூர தந்தை கைது - Minor father Killed his 45 day old infant in Dantewada

சத்தீஸ்கரில், பிறந்த 45 நாள்களே ஆன குழந்தையை குளத்தில் வீசி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (ஜூன்3) கைது செய்தனர்.

பிறந்து 45 நாட்களே ஆன குழந்தையை கொன்ற கொடூர தந்தை கைது

author img

By

Published : Jun 4, 2022, 6:36 PM IST

தந்தேவாடா: சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் உபேட் கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மே21 அன்று பிறந்த 45 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையை காணவில்லை எனக் குழந்தையின் குடும்பத்தினர் பதறிப் போய் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அக்குழந்தையின் தந்தை தான் குற்றவாளி எனத் தெரியவந்தது. இதனையடுத்து எவ்வாறு கொலை நடந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவிக்கையில், யூடியூப்பை பார்த்து தான் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

முதலில் குழந்தையை கடத்தி சென்று, கிராமத்திற்கு வெளியே சாலையின் கீழ் உள்ள வாய்க்கால் பகுதியில் வைத்துள்ளார். பின்னர் மறுநாள் அந்த வாய்க்காலுக்கு சென்று, குழந்தையை தூக்கி அருகிலிருந்த குளத்தில் வீசி உள்ளார். இந்நிலையில் குழந்தையை காணாமல் தவிக்கும் குடும்பத்தினரிடமும், பகுதி மக்களிடமும் எதையாவது சொல்லி அவர்களை நம்ப வைக்க வேண்டும் என்று எண்ணிய கொடூரத் தந்தை, ஒரு துணியில் கோழியின் ரத்ததை நனைத்து அதை வீட்டின் வெளியே போட்டுவிட்டார்.

பின்னர் அதை பார்த்த குடும்பத்தினரிடம் இந்த இரத்த கறையை பார்த்தால் ஏதோ ஒரு காட்டு விலங்கு தான் குழந்தையை கொன்றுள்ளது என அவர்களிடம் பொய் கதை சொல்லி நம்ப வைத்தார். இதுகுறித்து தந்தேவாடா எஸ்பி சித்தார்த் திவாரி கூறுகையில், "எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து பார்க்கும்பொழுது இது சந்தேகத்திற்குரிய வழக்காகத் தெரிந்தது.

இதைத் தீவிரமாக விசாரணையின் செய்த போது, ​அக்குழந்தையின் தந்தை சதித்திட்டம் தீட்டியது எங்களுக்குத் தெரியவந்தது. குழந்தையை கொன்ற தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் மைனர்கள். 18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணமான உடனேயே, இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. ஆனால் அக்குழந்தையின் மீது விருப்பம் இல்லாமல் கொடூரமான தந்தை இந்த குற்றத்தை செய்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையை கொலை செய்த கொடூர தந்தையை கைது செய்தனர்.

இதையும் படிங்க: சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்... நான்காவது நபர் கைது...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.