ETV Bharat / bharat

காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் கொடுத்த சத்தீஸ்கர் தேர்தல் முடிவு.. பாஜகவுக்கு வெற்றி முகம்.. கள நிலவரம் என்ன? - சத்தீஸ்கர் முதலமைச்சர் வேட்பாளர்

chhattisgarh election Result: சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 51 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதனால் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இங்கு பெரும்பான்மைக்கு 46 இடங்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 12:35 PM IST

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7 மற்றும் 17ஆம் தேதி இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் 76.31 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில் அந்த வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலையில் இருந்த நிலையில் 11 மணிக்கு மேல் பாஜக கூடுதல் இடங்கள் கிடைத்து வருகிறது. அதன்படி பாஜக 51 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 34 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில பாஜக தலைவர் அருண் சாவ், 'சத்தீஸ்கரில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைப் பிடிக்கும்' எனவும் அதற்காக மக்களின் ஆதரவு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் பதான் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பகேல் 187 வாக்குகள் வித்தியாசத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் விஜய் பகேலை விட முன்னிலை வகிக்கிறார். அதேபோல, பாஜக மாநில தலைவர் அருண் சாவ் போட்டியிட்ட லோர்மி தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தானேஷ்வர் சாஹூவைக் காட்டிலும், 2,376 வாக்குகள் பெற்றும் முன்னிலை வகிக்கிறார்.

சத்தீஸ்கரில் ராஜ்நந்த்கான் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ராமன் சிங் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கிரீஷ் தேவாங்கனை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகித்து வருகிறார்.

காலை 11:00 மணி நிலவரப்படி, சத்தீஸ்கரில் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தனது சொந்த தொகுதியான பாடனில் தனது மருமகன் விஜய் பாகேலிடம் பின்னடைவை சந்தித்து வருகிறார். மேலும், 11:30 மணி நிலவரப்படி, மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பிஜப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம் மாண்டவியும், கவர்தா தொகுதியில் பாஜகவின் வேட்பாளர் விஜய்யும், பண்டாரியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நீலுவும் முன்னிலை வகிக்கின்றனர்.

90 சட்டமன்ற தொகுதிகளில் 46 தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், பாஜக 51 இடங்களில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தெலங்கானாவில் 'கார்' வேகத்தை நிறுத்திய 'கை' - கேசிஆரின் 9 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.