ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். ஆந்திராவின் பிரபலமான வைணவ ஆலயங்களில் ஒன்றான இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வாடிக்கை.
அதன்படி நேற்று (ஆகஸ்ட் 24ஆம் தேதி) கோயில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் போது, உண்டியலில் இருந்த காசோலை ஒன்றை எடுத்து பார்த்துள்ளனர். அதில் 100 கோடி ரூபாய்க்கு கோயில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது முதலில் 10 ரூபாய் என்றும், பிறகு அதை அடித்து 100 கோடி ரூபாய் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்து, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து இது குறித்து விசாரித்தனர்.
இதையும் படிங்க: "வறட்சியால் கருகிய பனை மரங்களை மீட்க நடவடிக்கை" - எம்பி கனிமொழி உறுதி!
அந்த காசோலையில் உள்ள தகவல்களின் படி பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு காசோலை அது என்பது என தெரிய வந்தது. காசோலை எம்விபி டபுள் ரோடு கோடாக் வங்கிக் கிளையின் பெயரில் இருந்தது. இதனால், அதிகாரிகள் அனைவருக்கும் ஆர்வமும், சந்தேகமும் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் வங்கிக்குச் சென்று பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு குறித்த தகவல்களை கூறினர்.
அப்போது அவரது கணக்கில் ரூ.17 மட்டும் இருப்பு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, காசோலையை காணிக்கையாக போட்டவரின் தகவல்களை கண்டறியும் முயற்சியில் தேவஸ்தான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது. அவரை கண்டுபிடித்து, இனி இது போன்ற செயலில் ஈடுபடாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக காசோலை அளித்தவருக்கு கோயில் அதிகாரிகளை ஏமாற்றும் எண்ணம் இருந்தால், அவர் மீது காசோலை பவுன்ஸ் வழக்கைத் தொடங்க வங்கியைக் கோரலாம் என்று கூறப்படுகிறது.கோயில் உண்டியலில் மோசடியாக செக் போட்ட நபரின் செயலால், பக்தர்களும், நிர்வாகத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்!