ETV Bharat / bharat

சார்மினார் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து - 5 பேர் காயம்! - சென்னை

Charminar Express: சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ், நாம்பள்ளி ரயில் நிலையத்தில் சுவர் மீது மோதி 3 பெட்டிகள் தடம் புரண்டதில் 5 பேர் காயம் என தகவல் வெளியாகியுள்ளது.

Charminar Express train derailed accident at Nampally
சார்மினார் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 11:29 AM IST

Updated : Jan 10, 2024, 11:42 AM IST

ஹைதராபாத்: சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலத்திற்கு தினசரி 3 ரயில்கள் வரை இயக்கப்படுகிறது. அப்படி தினமும் இயக்கப்படும் ரயில்களில் ஒன்றான சார்மினார் எக்ஸ்பிரஸ், தடம் புரண்டு விபத்துள்ளாகியுள்ளது.

அதாவது, சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ், மறுநாள் காலை 8.10 மணிக்கு தெலங்கானா மாநிலம் ஹைதராபத்தில் உள்ள நாம்பள்ளியில் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். சிலசமயம், கிராசிங்கில் காத்திருப்பதால் காலை 9 மணிக்கு மேல் நாம்பள்ளி ரயில் நிலையம் வரும்.

  • #WATCH | Telangana: Five people were injured after three coaches of Charminar Express derailed at the Nampally Railway Station

    The incident took place at around 9:15 AM. This Railway station is a terminal station where trains end. The train should have stopped before the end,… pic.twitter.com/mzlV82OLAu

    — ANI (@ANI) January 10, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று (ஜன.9) சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட சார்மினார் எக்ஸ்பிரஸ், இன்று காலை கடைசி ரயில் நிலையமான நாம்பள்ளிக்கு அருகில் வந்தபோது, எதிர்பாராத விதமாக தடம் புரண்டுள்ளது. இதில் 3 பெட்டிகள் வரை தடம் புரண்டதில், ரயில் கதவுகள் அருகே நின்றிருந்த 5 பயணிகள் வரை லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்த பயணிகளை, லாலாகுடாவில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். தற்போது நாம்பள்ளி கடைசி ரயில் நிறுத்தம் என்பதால், ரயில் மெதுவாக வந்த காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தடம் புரண்ட ரயிலை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரயில் தடம் புரண்ட காரணம் என்னவென்று ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரான வழக்கு; இன்று முதல் வழக்காக விசாரணை!

Last Updated : Jan 10, 2024, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.