ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், ஜூப்லி ஹில்ஸ் பகுதியில், மே 28ஆம் தேதி 17 வயது சிறுமி சொகுசு காரில் கடத்திச்செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்தப் புகாரின் அடிப்படையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் சிறுவர்கள்.
இருப்பினும் குற்றத்தின் அடிப்படையில் 5 சிறுவர்களையும், 18 வயதுக்கும் மேற்பட்டவர்களாக கருதி, அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி சிறார் நீதி வாரியத்தில் காவல்துறை சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து சிறுவர்களில் ஒருவர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை என்றும், ஆனால் வன்கொடுமை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்களில் இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நம்பல்லி நீதிமன்றத்தில் 350 பக்க குற்றப்பத்திரிகை ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் 65 சாட்சிகளின் வாக்குமூலங்கள், அறிவியல்பூர்வ சான்றுகள், தடயவியல் அறிக்கைகள் அடங்கியுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான உறுதியான ஆதாரங்கள் இதில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான 5 சிறுவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில் போலீசார் முனைப்பு!