ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 111 கிலோ சராஸ் எனும் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். குல்லு மாவட்டத்தில் நடந்த சோதனையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட பின், இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை தலைவர் (டிஜிபி) சஞ்சய் குண்டு தெரிவித்துள்ளார்.
’குல்லு காவல்துறையினர் 111 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இது வரலாறு காணாத அளவுக்கு அதிக பறிமுதலாகும்' என அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 111 கிலோ கஞ்சா பறிமுதல் அல்லாமல், 33.2 கிலோ கஞ்சாவை இந்த புதிய ஆண்டில் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தெருக்களில் போதை மருந்து விற்கும் குற்றவாளிகள் மேல் அதிக கவனம் செலுத்தாமல், சட்டவிரோதமாக கஞ்சா கடத்தும் பெரும் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சரக்கு எங்கிருந்து வந்தது, சென்று சேர இருந்த இடம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க... கஞ்சா செடிகளை கண்டறிய ட்ரோன் கேமரா