டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் வாங்கிய புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் பணி நேரம், சம்பளக் கணக்கீடு உள்ளிட்டப் பல்வேறு அம்சங்கள் மாறுதல் அடைய இருக்கின்றன.
இந்தப் புதிய விதிகள் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாரத்தில் மூன்று நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு
தற்போது, ஊழியர்கள் ஒரு நாளுக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 48 மணி நேரம் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊழியர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக, அதிகரிக்கப்படவுள்ளது. இதனால் 4 நாட்கள் மட்டும் ஊழியர்களுக்குப் பணி கொடுத்தால் போதுமானது. மீதமுள்ள 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
இது ஒவ்வொரு ஊழியரின் ஒப்புதலுடன் நடைபெறவுள்ளது. ஏனெனில், அனைத்து ஊழியர்களாலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது.
அதேபோல், பிரசவ மற்றும் உடல்நலப் பாதிப்பு குறித்தான விடுப்புகளுக்கான நாட்கள் 240 நாட்களில் இருந்து 300 நாட்களாக உயர்த்தப்படயிருக்கிறது.
குறையும் சம்பளம்
புதிய விதிகளின்படி, ஊழியர்களுக்குக் கொடுக்கும் அடிப்படை சம்பளம் (Basic Salary) குறைந்தபட்சம் 50 விழுக்காடும், வழங்கப்படும் வீட்டு வாடகைப் படி, அகவிலைப் படி, பயணப் படி உள்ளிட்ட படித் தொகை 50 விழுக்காட்டிற்கு மிகாமலும் இருக்க வாய்ப்பு உள்ளது.
இதன்மூலம், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகமானால் பிஎஃப் பிடித்தமும் அதிகரிக்கும்.
இதனால் மாதச் சம்பளம் இனி மெல்ல குறையும். ஆனால், ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் பணிக்கொடைத்தொகை அதிகரிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: உலகிலேயே மிக உயரமான சாலை லடாக்கில் திறந்து வைப்பு