ஹைதராபாத்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை நோக்கி புறப்பட்ட எல்.எம்.வி.3 ராக்கெட் வெற்றிகரமாக சந்திரயான்-3 திட்டத்திற்கான செயற்கைக்கோளை புவியின் உயர்வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. இந்தியா வணிக ரீதியான ராக்கெட் ஏவுதல்களில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிலையில், உலகின் நான்காவது நாடாக நிலவிலும் தடம் பதிக்கச் சென்றிருப்பது உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
உலக அளவில் இந்தியா எப்போதும் அதன் பங்கை நிரூபிக்க தவறியது இல்லை. அந்த வகையில் அறிவியல் உலகில் தன் தரத்தை முன்னிலைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்தியா, அறிவியல் உலகில் வெற்றிகரமாக சந்திராயன்-1 மற்றும் சந்திரயான்-2 திட்டத்தைத் தொடர்ந்து தற்போது, சந்திரயான்-3 திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
என்ன தான் பல்வேறு நாடுகள் விண்வெளி ஆய்வுகளில் சிறப்பு பெற்று இருந்தாலும், அறிவியல் உலகில் இயற்கை செயற்கைகோளாக அறியப்படும் சந்திரனின் பின்புலம் அறியா நிலையிலே இருந்து வந்தது. அந்த வகையில் சந்திரனின் அழகை கடந்து, புவியின் பல்வேறு புரிதல்களை தீர்மாணிக்க உதவியது சந்திரன், புவியின் நேரம், கடல் அலைகளின் உயர் மட்டங்கள், சூரிய குடும்பத்தின் பொதுவியல் மற்றும் உள்நோக்கு பரிணாம வளர்ச்சி என பல்வேறு புரிதல்களுக்கு வழிவகுத்தது. நிலாவின் தன்மைகள் மற்றும் ஈர்ப்பு விசை என அதன் தன்மைகளுடன் மக்களிடத்தில் வியப்பை ஆழ்த்தியுள்ளது.
அதன் அடிப்படையில் சந்திரனின் முழு பண்புகளை விரிவாக உலகிற்கு தெளிவு படுத்தும் நோக்கில் முதல்முறையாக களமிறங்கியது இந்தியா. சந்திரனின் தன்மைகளை மட்டும் அறிவதற்கென உருவாக்கப்பட்ட திட்டமே சந்திரயான். இதுவரையில் இந்தியா, சந்திரன் குறித்த தகவல்களை அறிய இரண்டு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்திராயன்-1 விண்ணில் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு, நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதிசெய்து, சந்திரயான் 1-ன் வெற்றியை பதிவு செய்த நிலையில், நிலவில் தடம் பதித்த நாட்டின் வரிசையிலும் 4-ஆவது இடத்தை பிடித்தது இந்தியா. அதற்கு அடுத்த கட்டமாக எந்த நாடும் முயற்சிக்கூட செய்து பார்காத நிலையில், நிலவின் பின்புறத்தை ஆய்வு செய்யும் பயணத்தில் இறங்கியது இந்தியா. அந்த ஆய்வுக்காக ஆர்பிட்டர், விக்ரம் எனப்படும் லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற ரோவர் என புது தொழில் நுட்பங்களுடன் முற்றிலும் சந்திரயான்1-ல் இருந்து வேறுபட்டு களமிறக்கப்பட்டது சந்திராயன் 2.
இதன் லேண்டர் மற்றும் ரோவர் தொழில் நுட்ப காரணங்களில் ஏற்பட்ட கோளாறால் வழிதவறிய நிலையில் ஆர்பிட்டர் இன்றளவிலும் நிலவின் புகைப்படங்களை கொடுப்பதில் முதல்நிலை வகித்து வருகிறது. இதன் வரிசையில் தற்போது, நிலவின் தன்மைகள் மற்றும் சுற்றுப்பாதைகளை அரிய சந்திராயன் 3 களமிறங்க சிறப்பான செயல்பாட்டு திறன்களுடன் காத்து கொண்டிருக்கிறது.
LVM-3 செயற்கைகோளைத் தொடர்ந்து தற்போது சந்திரயான்-3 ரோவருடன் செல்லவிருக்கிறது. அதிகளவில் பாறைகள் நிறைந்த பள்ளங்கள் மற்றும் தாதுக்களின் படிமங்களை உறுதிசெய்யும் வகையில் கடினமான உந்துவிசையை தாக்கும் திறனுடன் இணைக்கப்பட்டுள்ள ரோவர் மற்றும் லேண்டர், நிலவின் தென்பகுதியில் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு தரையிறக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதிலிருந்து வெளிவரும் ரோவர் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பு உள்ளது. சந்திரயான் -2 வின் தவறுகளை திருத்திக்கொள்ளும் வகையில் சந்திரயான் 3 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு செயல்களை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களுடன் சந்திராயன்-3 தயார் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.