டெல்லி: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அரும்பாடுபட்ட அலுவலர்களுக்கு, ஆசியச் சுற்றுச்சூழல் அமலாக்க விருது வழங்கி மத்திய அரசு கெளரவிக்கவுள்ளது.
வனவிலங்குகள் வேட்டையாடுதல், மரம் கடத்தல் போன்ற குற்றங்களை தடுத்து தங்களின் பணிகளைத் திறம்பட செய்யும் அலுவலர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்தார்.