இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை பரவல் தற்போது தணியத் தொடங்கியுள்ளது. மே மாத முதல் வாரத்தில் உச்சம் தொட்ட இரண்டாம் அலை தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஓயத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், பெருந்தொற்று நிபுணர்கள் பலர் தற்போதே மூன்றாம் அலை தொடர்பாக எச்சரிக்கை விடத் தொடங்கியுள்ளனர்.
மூன்றாம் அலை எப்போது
நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினரான வி.கே சரஸ்வத் மூன்றாம் அலை தொடர்பாக கூறியதாவது, இந்தியாவின் முன்னணி பெருந்தொற்று நிபுணர்கள் பலரும் மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது எனக் கூறியுள்ளனர். பெரும்பாலும் செப்டம்பர்- அக்டோபர் மாத காலத்தில் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இந்த இடைப்பட்ட மாதங்களில் எவ்வளவு முடியுமோ அதற்கேற்ப அதிகளவில் தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம். தடுப்பூசி மூலமே தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
அதேவேளை, மூன்றாம் அலையை கையாளுவதற்கு தேவையான ஆக்ஸிஜன் வங்கிகளை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: "விளைவுகளை சந்திப்பீர்கள்" ட்விட்டருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இந்திய அரசு