நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் ஆறாவது கூட்டம் நேற்று(பிப்.20) நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், சில மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் மூத்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். நாம் புதுமைகளை ஊக்குவிக்க வேண்டும். தொழில்நுட்பத்தை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி இந்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதி அறிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் மூலம் இந்தியா தனது வளர்ச்சி பாதையில் வேகமாக காலெடுத்து செல்லும்.
மேலும், இளைஞர்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளனர். இந்திய பொருளாதாரத்தை உயர்த்த மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...நிதி ஆயோக்: மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை