டெல்லி: கடந்த நவ.11ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான ஏனைய ஆறு கைதிகளை விடுவிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனுஅளித்துள்ளது.
அந்த மனுவில், 'இந்த விவகாரம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு சம்மந்தப்பட்டதால் ஒன்றிய அரசின் தரப்பை உச்ச நீதிமன்றம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த வழிமுறைகள் ஏதும் செய்யாமல் உச்ச நீதிமன்றத்தில் அந்த விடுவிக்க கோரிய மனு அளிக்கப்பட்டது’ என குறிப்பிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 18ஆம் தேதி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன், 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த நவ.11ஆம் தேதி அதே வழக்கில் கைதான ஏனைய கைதிகளான நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், சாந்தன் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேடையில் நிதின் கட்கரிக்கு உடல்நலக்குறைவு - கவலை தெரிவித்த மம்தா