ETV Bharat / bharat

பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க தயார்- பாஜக! - விவசாயிகள்

நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாய சட்டங்கள் குறித்து பாஜக விவாதிக்க தயாராக இருக்கிறது என அக்கட்சியின் மாநிலங்களவை எம்பியும், ஜார்க்கண்ட் மாநிலத் தலைவருமான தீபக் பிரகாஷ் கூறினார்.

Pegasus and farms laws
Pegasus and farms laws
author img

By

Published : Aug 9, 2021, 3:17 PM IST

டெல்லி : மாநிலங்களவை பாஜக எம்பியும், ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவருமான தீபக் பிரகாஷ் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்க விருப்பம் இல்லை. பெகாசஸ் விவகாரத்தில் வேவு பார்ப்பது என எதுவும் இல்லை, அரசுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

விவசாய சட்டங்கள் முற்றிலும் விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் விவாதிக்கப்பட்டால், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் முழுமையாக அம்பலப்படுத்தப்படும்.

எனவே அவர்கள் அந்த பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை. மேலும், வெறுமனே வம்பு செய்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்மறையான அரசியலைச் செய்கின்றன. இது ஜனநாயக அமைப்பை அவர்கள் நம்பவில்லை என்பதை காட்டுகிறது. இது மிகவும் வருத்தமாக உள்ளது” என்றார்.

பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க தயார்- பாஜக!

தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பிலும் அரசு பின்வாங்கவில்லை என்றார். பெகாசஸ் மென்பொருள் வாயிலாக வேவு பார்க்கப்பட்ட விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தொடர்ச்சியாக முடக்கிவருகின்றன.

இதற்கிடையில், டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் சிறப்பு அனுமதிபெற்று போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், தேசிய மாநாட்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், லோக் ஜன சக்தி உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : பெகாசஸ் வலையில் நீதிபதி அருண் மிஸ்ரா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.