நாட்டின் கோவிட்-19 பாதிப்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், இன்று (மே.10) நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தடுப்பூசிக் கொள்கை குறித்து விசாரணை நடத்தியது.
இவ்விசாரணையில் தடுப்பூசிக் கொள்கை குறித்து மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ”தடுப்பூசிக் கொள்கையில் நீதிமன்றத் தலையீடு ஆபத்தாக முடியும். நீதிமன்றத் தலையீடு தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
நிர்வாக முடிவுகள்மீது நீதிமன்றம் நம்பிக்கை வைக்க வேண்டும். நிபுணர்கள், விஞ்ஞானிகள், உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலரின் ஆலோசனையில் இந்தக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு இலவசத் தடுப்பூசி வழங்க அரசு வழிவகை செய்துள்ளது. இந்தியாவின் இரு நிறுவனங்கள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துவரும் நிலையில், முறையான விலை நிர்ணயமே மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.