மாநில அரசுகளுக்கான கரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ”பல்வேறு மாநில அரசுகளுக்கு இதுவரை 26 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில் சுமார் 25 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒன்றரை கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநில அரசுகளில் கையிருப்பில் உள்ளன.
மேலும், அடுத்த மூன்று நாள்களில் சுமார் 4.5 லட்சம் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 80 ஆயிரத்து 834 பேருக்கு கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 34.84 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாதுகாப்புத் துறை மேம்பாட்டிற்கு ரூ.500 கோடி: ராஜ்நாத் சிங் ஒப்புதல்