டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், மத்திய அரசு தங்களது இத்தகைய நடவடிக்கைகள் மூலம் நாடாளுமன்ற நடைமுறையை முழுமையாக நிராகரிப்பதாக சாடினார். மேலும், "இந்திய வரலாற்றில் பெட்ரோல், டீசல் விலை ஒருபோதும் இந்த அளவுக்கு உயர்ந்ததில்லை. பொது விநியோக முறை மூலம் விற்கப்பட்ட மண்ணெண்ணெய் விலையும் தற்போது விண்ணைத் தொடுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் கலால் வரியாக மட்டும் அரசு 21 லட்சம் கோடி ரூபாயை வசூலித்துள்ளது" எனக் குற்றம் சாட்டினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ஆனந்த் சர்மா, "மத்திய பாஜக அரசு, இந்தியப் பொருளாதாரத்தை மிக மோசமாகக் கையாண்டு பெரும் தவறிழைத்து விட்டது. இந்திய ஜனநாயகத்தின் உயரிய அமைப்பு ஒன்றையே இயல்பாக செயல்பட இந்த அரசு அனுமதிக்கவில்லை. நாட்டின் குடிமக்கள் குறித்த விஷயத்திலேயே எதிர்க்கட்சியினராகிய எங்களைக் குரல் எழுப்ப விடாமல் தொடர்ந்து எங்களது உரிமைகளை மறுத்து வருகிறது.
ஒவ்வொரு வாரமும் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தில் விவாதம் எழுப்ப எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்பட வேண்டும் எனும் நாடாளுமன்ற நடைமுறையையே இந்த அரசு முற்றிலும் மறுக்கிறது. அரசு வணிகத்தின் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க மட்டும் நாடாளுமன்றம் கூட்டப்படுவது இல்லை. மதிக்கப்பட வேண்டிய விதிகளின் கீழேயே அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்படுகின்றன" என்றார்.
அவரைத் தொடர்நது பேசிய காங்கிரஸ் எம்.பி தீபேந்தர் ஹூடா "விவசாயிகள் பிரச்னையில் அரசு பொறுப்பற்று செயல்படுகிறது. கடந்த 100 நாள்களில் 300 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாடாளுமன்ற அமைப்பின்மீது நம்பிக்கை கொண்டு லட்சக்கணக்கான மக்கள் எங்களை நம்பிக்கையோடு எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். வாய்பேச முடியாத பார்வையாளர்களாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க முடியாது" என்றார்.
இதையும் படிங்க : ராகுல் காந்தி கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை- கைலாஷ் விஜய்வர்ஜியா!