கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அம்மாநிலத்திற்கு சென்ற பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனத்தின் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் நடத்தியதாக, பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தாக்குதல் நடைபெற்ற அன்றைய தினம் பணியில் இருந்த மூன்று ஐபிஎஸ் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி கல்யாண் பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லாவுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், ஐபிஎஸ் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்யும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே உள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த அலுவலர்களை பணியிடமாற்றம் செய்வதன் நோக்கம் தெளிவாக புரிகிறது என்றும், காவலர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக" கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் : கொதித்த சிந்தியா - கலாய்த்த மம்தா பானர்ஜி!