ETV Bharat / bharat

14 செல்போன் செயலிகளுக்குத் தடை - உளவு பார்த்ததாக மத்திய அரசு நடவடிக்கை!

author img

By

Published : May 1, 2023, 8:59 PM IST

இந்திய அரசின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் காஷ்மீரின் கள நிலவரம் குறித்து தகவல் கசியவிடும் வகையிலும் இயங்கியதாக 14 செல்போன் செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.

APP Ban
APP Ban

டெல்லி : பாகிஸ்தானில் இருந்து தகவல்களைப் பெறவும், செய்திகளைப் பகிரவும் பயன்படுத்தப்பட்டதாக 14 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய பாதுகாப்புத் துறை, ராணுவம், உளவு மற்றும் விசாரணை அமைப்புகள் வழங்கிய பரிந்துரையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கிருப்வைசர், எனிக்மா, மீடியா ஃபயர், பிரேயர், பி சாட், சேப்சுவிஸ், விக்கர்மி, நாந்த்பாக்ஸ், கோணியன், ஐ எம் ஓ, எலிமென்ட், செகண்ட் லைன், ஜாங்கி, த்ரீமா ஆகிய 14 செயலிகள் தடை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலிகள் அனைத்தையும் மத்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69 A சட்டப் பிரிவின் கீழ் மத்திய அரசு தடை செய்து உள்ளது.

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்புகள், இந்தச் செயலி மூலம் காஷ்மீரின் கள நிலவரம் மற்றும் அங்கு நிலவும் சூழலின் உண்மைத்தன்மை குறித்து சிலிப்பர் செல் எனப்படும் தீவிரவாதத்திற்கு துணை நிற்பவர்கள் மூலம் தகவல்களைத் திரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தச் செயலிகள் தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைப்புகள் அளித்த தகவலை அடுத்து தடை செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தச் செயலிகளை உருவாக்கியவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போது தலைமறைவானதாகவும், அவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியர்களின் தகவல்கள் திருடப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்தப் புகார்கள் தொடர்பாக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சீனா மற்றும் சீனா தொடர்புடைய 200 செல்போன் செயலிகள் தடை செய்யப்பட்டு உள்ளன. இதில் மிகவும் பிரபலமான பப்ஜி, டிக் டாக் உள்ளிட்ட செயலிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் இந்தச் செயலிகள் இருந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான மக்களின் இணைய பார்வைகளை பாதுகாக்கும் என்றும்; தனிப்படை ரகசியங்கள் கசிவதைத் தடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த முடிவு இந்திய சைபர் ஸ்பேஸ் துறையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வதற்கான இலக்கு நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : தேச விரோத சட்டப்பிரிவுக்கு எதிரான மனு - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.