ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து திருடப்பட்ட தகவல்கள் மூலம் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் உள்ள அலுவலர்களின் மெயில் ஐடி-களை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "உயர் அலுவலர்களின் வாட்ஸ்அப் கணக்குகளுக்கும், மெசேஜ்களுக்கும் லிங்க் ஒன்றை அனுப்பி கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பான தகவல்களை அளிக்குமாறு ஹேக்கர்கள் கேட்கின்றனர்.
அவ்வாறு அவர்கள் அனுப்பும் லிங்குகளை திறந்தால் ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ தளத்தைப் போலவே இருக்கும் போலி தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது.
என்ஐசி.இன், ஜிஓவி போன்ற முகவரிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. அலுவலர்களின் மெயில் பக்கத்தில் இருக்கும் முக்கியத் தகவல்களை திருடுவதன் மூலம் மிகப்பெரிய சதித்திட்டங்களைத் தீட்ட வாய்ப்புள்ளதால், உயர் அலுவலர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய போலி லிங்குகள், போலி இணையப்பக்கம் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முடிந்தால், மெயில் ஐடி-யின் பாஸ்வேர்டு-ஐ மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்மனாவாது.. ஆலயமாவாது.. அடியோடு சிதைக்கப்பட்ட கரோனா மாதா