ETV Bharat / bharat

கேரளாவில் தீவிரமடையும் கரோனா... பரிசோதனையை அதிகரிக்க மத்திய குழு அறிவுறுத்தல்! - ருச்சி ஜெயின்

திருவனந்தபுரம்: கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசுக்கு மத்திய குழு அறிவுறுத்தியுள்ளது.

பரிசோதனை
பரிசோதனை
author img

By

Published : Feb 7, 2021, 4:05 PM IST

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், கேரளாவில் மட்டும் பாதிப்பு தொடர் ஏற்றத்தை கண்டுவருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் நிலைமையை கண்காணித்த மத்திய குழு பரிசோதனையை அதிகரிக்க கேரள அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவர் ருச்சி ஜெயின், மத்திய சுகாதாரத் துறை பிரிதிநிதி மருத்துவர் ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய மத்திய குழு பரவல் விதிகம் அதிகரித்துவருவதாக கவலை தெரிவித்துள்ளது. இதனிடையே, கொல்லத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜாவை சந்தித்த மத்திய குழு பரிசோதனையை அதிகரிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

கரோனா பரவல் குறித்து கேரள அரசு, "கேரள தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விதிகளை பின்பற்றாமல் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டால் பரவல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மத்திய குழுவின் ஆய்வின்படி தொடக்கத்திலிருந்தே, பரிதோதனையை அதிக அளவில் மேற்கொண்டிருந்தால் இந்த நிலைமை தவிர்த்திருக்கலாம்.

கரோனாவால் பாதிக்கப்பட்டோரை கண்காணிப்பதில் விழிப்புடன் இருந்து தனிமைப்படுத்தலை உறுதி படுத்திருக்க வேண்டும். கடந்த மூன்று நாள்களில், ஒரு நாளைக்கு 80,000க்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.