ETV Bharat / bharat

Make in India: லட்சம் ட்ரோன் தயாரிக்கத் திட்டம் - மத்திய அமைச்சர் அனுராக் பேச்சு - ஒரு லட்சம் ட்ரோன் தயாரிக்க மத்திய அரசு திட்டம்

மேக் இன் இந்தியா திட்டத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் 1 லட்சம் ட்ரோன்களை தயாரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

அனுராக் தாக்கூர்
அனுராக் தாக்கூர்
author img

By

Published : Dec 6, 2022, 6:22 PM IST

சென்னை: தாழம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில், மெய்நிகர் ட்ரோன் இணையதள கற்றல் தளத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் துவக்கி வைத்தார். தொடர்ந்து தனியார் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரோன் உற்பத்தி மையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

ட்ரோன் யாத்திரையைத் தொடங்கி வைத்த அமைச்சர் அனுராக் தாகூர், கருடா கிஷான் ட்ரோன் சேவையைக் கண்டு களித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாதுகாப்பு, வேளாண், தோட்டக்கலை, சினிமா உள்ளிட்டப் பல்வேறு துறைகளில் ட்ரோன் தொழில்நுட்பம் அத்தியாவசியத்தேவையாக மாறி வருவதாகத் தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு லட்சம் ட்ரோன்களை உருவாக்கத்திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ட்ரோன் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர் அனுராக் தாகூர், ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளைத் தடுக்கவும், வேளாண் துறையில் பெரிய அளவிலான முன்னேற்றத்தைக்கொண்டு வர முடியும் எனவும் அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: CCTV: உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானைகளால் அச்சத்தில் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.