உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது. கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தற்போது 100 கோடி இலக்கை நோக்கி செல்லும் நிலையில், திட்டத்தை துரிதப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
அதன் முக்கிய முன்னெடுப்பாக, அடுத்த மூன்று மாதத்திற்கு மருத்துவ ஊசிகள் ஏற்றுமதிக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு 0.5 ml/1ml AD, 0.5/1/2/3 ml disposable syringes, 1/2/3 ml RUP மூன்று விதமான தடுப்பூசிகளுக்கும் பொருந்தும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 94 கோடியே 47 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 68 கோடிக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 26 கோடியே 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: TOP 10 HIGHLIGHTS: 3,000 கிலோ ஹெராயின் வழக்கு முழு பின்னணி!