ETV Bharat / bharat

Delhi air pollution: மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அவசரக் கூட்டம் - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அவசர கூட்டம்

டெல்லி காற்று மாசு (Delhi air pollution) வழக்குத் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் டெல்லி, அதன் அண்டை மாநில அரசுகளுடன், ஒன்றிய அரசு இன்று காலை 10 மணியளவில் அவசரக் கூட்டத்தை நடத்துகிறது.

Delhi air pollution
Delhi air pollution
author img

By

Published : Nov 16, 2021, 10:08 AM IST

டெல்லி: தீபாவளிக்குப்பின் தலைநகர் டெல்லி கடுமையான காற்று மாசு காரணமாகத் திணறிவருகிறது. டெல்லியில் காற்று மாசு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதில், ஒன்றிய, மாநில அரசுகளின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம் நிலைமையை விரைவாகச் சீராக்க உடனடியாகக் குழு அமைப்பது மட்டும் போதாது என்றும், உடனடி நடவடிக்கைகள் தேவை என்றும் கூறியது.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி

மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை (Work From Home) என்ற முறையை டெல்லியில் பின்பற்றவும் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகளின் தலைமைச் செயலர்களுடன் அவசர ஆலோசனை நடத்தவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, காற்று மாசுபாட்டை விரைவாகப் போக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க சம்பந்தப்பட்ட மாநில அலுவலர்களுடன் ஒன்றிய அரசு அவசரக் கூட்டத்தை நடத்துகிறது. அதன்படி, இந்தக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக காலை 10 மணிக்குத் தொடங்கியது.

டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு நாளை (நவம்பர் 16) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Delhi air pollution: முழு லாக்டவுனுக்கு தயார் - நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.