ETV Bharat / bharat

Tomato: கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனை... மத்திய அரசு அதிரடி!

author img

By

Published : Jul 15, 2023, 11:00 PM IST

நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில், டெல்லி - என்.சி.ஆர், பாட்னா, லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மத்திய வேளாண் கூட்டமைப்புகள் மூலம் கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

Tomato
Tomato

டெல்லி : நாட்டில் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், டெல்லி - என்.சி.ஆர், பாட்னா, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் மத்திய அரசு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தக்காளி விலை நாள்தோறும் புது உச்சத்தை தொட்டு வருகிறது. பருவமழை, பற்றாக்குறை, வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் ஒருசேர தக்காளி விலை அதிகரித்து காணப்படுவதால், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடும் கிராக்கி காரணமாக தக்காளி விலை அதிகரித்து காணப்படும் நிலையில், அதனால் கூட ஒருசில இடங்களில் குற்றச் சம்பவங்கள் நடக்கத் தொடங்கி உள்ளன. நாடு முழுவதும் பற்றாக்குறை காரணமாக கிலோ தக்காளியின் விலை 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரம், மத்திய அரசு தரப்பில் நாடு முழுவதும் சராசரியாக கிலோ தக்காளியின் விலை 117 ரூபாய் என் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில் சில்லரை நுகர்வோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தக்காளியை கொள்முதல் செய்து மத்திய அரசு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி - என்.சி.ஆர், பாட்னா, லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மத்திய அரசு மூலம் கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் மூலம் தக்காளி கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்மையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த அதனை கொள்முதல் செய்யுமறு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்புக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி மற்றும் நொய்டாவின் பல்வேறு பகுதிகளைத் தவிர, லக்னோ, பாட்னா மற்றும் முசாபர்பூரில் தள்ளுபடி விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க : Chandrayaan-3 : சந்திரயான்-3 விண்கலத்தின் அப்டேட் என்ன? விஞ்ஞானி விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.