டெல்லி : சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவு இன்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) அறிவித்தது.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகள் குழுவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseresults.nic.in இல் கிடைக்கும். இது தவிர, digilocker.gov.in இணையத்திலும் தரவுகளை சரிபார்த்துக்கொள்ளலாம்.
இதற்கு மாணவர்களின் பட்டியல் எண் (ரோல்) அவசியம். மேலும், சிபிஎஸ்இ பாஸ் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் இடம்பெயர்வு சான்றிதழ்கள் டிஜிலாக்கர் சேவையில் கிடைக்கும்.
இதற்கு 'கல்வி' பிரிவின் கீழ் உள்ள 'சிபிஎஸ்இ' ஐ கிளிக் செய்வதன் மூலம் மாணவர்கள் தங்கள் ஆவணங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில், சிபிஎஸ்இயில் பெண்கள் தேர்ச்சி சதவீதம் 92.15 சதவீதமாகவும், ஆண்கள் தேர்ச்சி 86.19 சதவீதமாகவும் இருந்தது.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகளுக்குப் பிறகு, பல்கலைக்கழகங்கள் இளங்கலை சேர்க்கை செயல்முறையைத் தொடங்கும். பல்கலைக்கழக மானிய ஆணையம் தனது 2021-22 வழிகாட்டுதல்களில், 12 ஆம் வகுப்பு முடிவுகள் வெளிவந்தவுடன் பல்கலைக்கழகங்கள் இளங்கலை சேர்க்கைகளைத் தொடங்கும் என்றும், செப்டம்பர் இறுதிக்குள் இந்த செயல்முறையை முடிக்கும் என்றும் கூறியுள்ளது. புதிய பாடங்களுக்கான வகுப்புகள் அக்டோபரில் தொடங்குகின்றன.
இதையும் படிங்க : சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்!