டெல்லி: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 94.40 விழுக்காடு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக மாணவர்களை விட மாணவிகள் 1.41 விழுக்காடு அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அந்த வகையில், மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு 95.21 விழுக்காடாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.80 விழுக்காடாகவும் உள்ளது. திருநங்கைகள் தேர்ச்சி விகிதம் 90 விழுக்காடாக உள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://cbse.digitallocker.gov.in/public/auth/login என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஒரே நாளில் அறிவிப்பது இதுவே முதல் முறை. முன்னதாக, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்கள் வெளியாகியது. 92.71 விழுக்காடு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு... 92.71% தேர்ச்சி!