ஹைதராபாத்: ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக, டிஆர்எஸ் அமைச்சர் கங்குலா கமலாகர், வட்டிராஜு ரவிச்சந்திரன் எம்பி ஆகியோர் ஆஜராகுமாறு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் தன்னை சிபிஐ இணை இயக்குநர், ஐபிஎஸ் அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்ததாக விசாகப்பட்டினம் சின்னவால்டேரில் வசிக்கும் கோவை ரெட்டி ஸ்ரீனிவாஸ் ராவ் என்பவர் சிபிஐ கைது செய்தது. டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவரை கடந்த நவ.22-ல் டெல்லியில் தங்க வைக்க ஏற்பாடு செய்ததாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை ரெட்டி ஸ்ரீனிவாஸ் ராவிற்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்ததில் ரூ. 21 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் உட்பட சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இத்தையை சூழ்நிலையில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: அஜித் - விஜய் ரசிகர்கள் நூதன புகார்.. சென்னை போலீஸ் பதில் என்ன?