ETV Bharat / bharat

கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? - வெற்றியை தீர்மானிக்கும் சாதிகள் எவை? - லிங்காயத் ஒக்கலி சாதிகள்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த முறை அரியணையை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பெரும்பாலும் சாதிகள் தான் கட்சிகளின் வெற்றியை தீர்மானிப்பதாக கூறப்படுகிறது. அப்படி எந்தெந்த கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்...

Karnataka election
கர்நாடகா தேர்தல்
author img

By

Published : Apr 7, 2023, 8:45 PM IST

Updated : Apr 7, 2023, 9:22 PM IST

ஹைதராபாத்: கர்நாடகா சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்புமனு தாக்கல் வரும் 13 ஆம் தேதி தொடங்கும் நிலையில், வரும் 20 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகும். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதுடன், பரப்புரையில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

கர்நாடகாவை பொறுத்தவரை கட்சிகளின் வெற்றியை சாதிகளே தீர்மானிப்பதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் லிங்காயத் சமூகத்தினர் ஆவர். சுமார் 70 தொகுதிகளில் இச்சமூக மக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதேபோல் ஒக்கலி சமூகத்தினர் 15 சதவீதம் பேர் உள்ள நிலையில், 35 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இச்சமூக மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்த இரண்டு சமூகங்கள் தான், வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சாதிகளாக பார்க்கப்படுகின்றன. பட்டியல் சமூகத்தை சேர்ந்த 24 சதவீதம் பேர், 50 சட்டமன்ற தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி லிங்காயத் சமூகத்தை சேர்ந்த 54 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். இதில் 37 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். 1952 முதல் தற்போது வரை கர்நாடகாவில் 23 பேர் முதலமைச்சர்களாக பணியாற்றி உள்ளனர். இதில் 10 பேர் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஒக்கலி சமூகத்தை சேர்ந்த 34 பேர் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளனர். இதில் ஆளும் பாஜகவை சேர்ந்தவர்கள் 8 பேர். மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 35 விழுக்காடு பேர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 99 எம்எல்ஏக்கள் இச்சமூகங்களை சேர்ந்தவர்கள் தான். இதில் பாஜக எம்எல்ஏக்கள் 61 பேர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் கர்நாடகாவில் 13 சதவீத இஸ்லாமிய சமூகத்தினர் வசிக்கின்றனர். சர்வக்னா நகர், சிவாஜிநகர், ஜெயா நகர், கல்புர்கி, விஜயாபூர், ராய்ச்சூர் உள்ளிட்ட 35 தொகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம். பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெறும். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களில் 46 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். 3 விழுக்காடு பிராமண சமூக மக்கள் வசித்து வரும் நிலையில், அந்த சமூகத்தை சேர்ந்த ஐவர் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

2018ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை பாஜக 42 விழுக்காடு வாக்குகளையும், காங்கிரஸ் 38, மதசார்பற்ற ஜனதா தளம் 11 சதவீத வாக்குகளையும் பெற்றன. இதேபோல் குருபா சமூகமும் சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கிடையே, ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் இஸ்லாமியர்களுக்கான 4 விழுக்காடு ஒதுக்கீட்டை மாநில அரசு ரத்து செய்தது அந்த சமூக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலைய புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள்!

Last Updated : Apr 7, 2023, 9:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.