கொல்கத்தா: மேற்கு வங்க கூடுதல் தேர்தல் அலுவலர் சஞ்சய் பாசு கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் தற்போதுவரை ரூ.248.9 கோடி பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், ரூ.37.72 கோடி பணமாகும். மீதமுள்ள ரூ.9.5 கோடி மதுபானம் ஆகும்.
மேலும் ரூ.114.44 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார். மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதி நடைபெற்றது. அதில், 79.79 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. முதல்கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் 191 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் 21 பேர் பெண்கள் ஆவார்கள். மேற்கு வங்கத்தில் 8ஆவது கட்ட நிறைவு வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: வன்னியர் உள்இடஒதுக்கீடு நிரந்தரமானது, அதை நீக்க முடியாது- மருத்துவர் ராமதாஸ் அறிக்கை