ரேவாரி: டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹரியானா மாநிலம் ரேவாரி ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தார். அப்போது காத்திருப்பு அறையில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார். ஆனால் கழிப்பறை பூட்டப்பட்டிருந்ததாக தெரிகிறது. காத்திருப்பு அறையில் இருந்த ஆண்- பெண் இரு கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து அந்த பெண் ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டபோது, அனைவரும் கழிப்பறையை அசுத்தப்படுத்துவதால், கழிப்பறையை திறக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கும், அங்கிருந்த வினய், ராம் அவதார் ஆகிய இரண்டு ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, இருவரும் அப்பெண்ணை கீழே தள்ளிவிட்டு, அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஜிஆர்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இரண்டு ஸ்டேஷன் மாஸ்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆபாசப் படங்களை காட்டி சிறுவனை கடத்திய பெண் மீது போக்சோ வழக்கு