கர்நாடகம்: திருமலைக்கு சாணி மெழுகிய காரில் பக்தர்கள் வந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பக்தர்கள் சிலர் குழுவாக திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் வந்திருந்த காரை நந்தகம் விடுதியின் வாகன நிறுத்துமிடத்தில் விட்டு, உள்ளே சென்றுள்ளனர். கார் பார்ப்பதற்கு வித்தியாசமானதாக தெரிந்ததால், அங்கு திருமலைக்கு வந்திருந்த பக்தர்களும், அங்கிருந்த பொதுமக்களும் காரை சுற்றி சுற்றி பார்த்துள்ளனர்.

என்ன பார்க்கிறீர்கள் என வாகன ஓட்டுநர் அவர்களிடம் வினவியபோது, காரில் என்ன பூசியிருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், “இது கோடை காலம் அல்லவா. அதனால் மாட்டு சாணம், மண் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட கலவையால் கார் முழுவதும் மெழுகப்பட்டுள்ளது. இது வெயிலின் சூட்டை தணிக்கும்” என்று பதிலளித்து பிரமிக்கவைத்துள்ளார்.
தீபன் சக்ரவர்த்தி ஆகிய நான்...! இது டிஜிட்டல் வேட்பாளரின் கதை