புதுச்சேரி பாஜக கூட்டணியில் என்.ஆர் காங்கிரசுக்கு 16, அதிமுக-பாஜக கூட்டணிக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில், மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில், சட்டப்பேரவை தேர்தலில் பங்கேற்க அக்கட்சி சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று(மார்ச்.11), நடைபெற்றது.
இதில் புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளர், விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிப்பாக, இலாசுபேட்டை, மணவெளி உள்ளிட்ட தொகுதிக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொகுதி நிலவரம் குறித்து கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: கடுமையாக காயமுற்ற மம்தா பானர்ஜி- மருத்துவ அறிக்கை பகீர்!