இது குறித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ராஜ்நிவாஸில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், ஆளுநர் மாளிகையில் அலுவலர்கள் குழு காணொலி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில் பொங்கல் தினத்தில் இருந்து ஆளுநர் மாளிகையை காணொலி சுற்றுப்பயணம் மூலம் மக்கள் காண ஏற்பாடு செய்து, அதற்கான தகவல் தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்துவது, ஆளுநர் மாளிகையில் உள்ள பணியாளர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பது, கரோனா தொற்றை கருத்தில் கொண்டு மக்களின் குறைகளை காணொளி மூலம் தீர்க்க தகவல் தொழில்நுட்ப வசதியை கூடுதலாக வலுப்படுத்துதல், சாலை சீரமைப்பு சம்பந்தமான புகார்கள் மீது பொதுப்பணித் துறையின் மூலம் நடவடிக்கை எடுப்பது, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை வந்த புகார்களின் மீது நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சம்பல்பூர் ஐஐஎம் கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்